தூத்துக்குடி: தூத்துக்குடி துறைமுகத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்களுக்கு 2017 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை வழங்க வேண்டிய அரியர்சை உடனடியாக வழங்க வேண்டும். என்பது வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும். ஊக்கத்தொகை உடனடியாக வழங்க வேண்டும் என வ உ சி போர்ட் பென்சனர்ஸ் அசோசியேசன் சார்பில் தர்ணா போராட்டம் நடைபெற்றது. 

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற துறைமுக தொழிலாளர்கள் வ உ சி போர்ட் பென்சனர் அசோசியேசன் சார்பில் இன்று வ உ சி துறைமுக அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர் இதில் ஓய்வு பெற்ற ஊழியர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். 

இதில் மத்திய அரசு துறைமுகத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு 2017 ஆம் ஆண்டு முதல் 21 ஆம் ஆண்டு வரை வழங்க வேண்டிய அரியர் பணத்தை உடனடியாக வழங்க வேண்டும் மேலும் சென்னை துறைமுகத்தில் ஓய்வு பெற்றவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது போன்று ட்ராப்பின் பென்ஷன் தூத்துக்குடி துறைமுகத்தில்  ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு வழங்க வேண்டும். 

80 வயதுக்கு மேல் உள்ள ஓய்வூதியர்களுக்கு கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும் ஓய்வுதியர்களிடம் கம்யூடேசன் பிடித்தம் செய்வதை 12 ஆண்டுகளாக குறைக்க வேண்டும். மேலும் துறைமுகத்தில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். பதவி உயர்வு வழங்க வேண்டும். புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். மேலும் ஓய்வூதியர்களுக்கான மருத்துவ வசதிகளை உடனடியாக வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். 

Related

“மேகதாது தனித்தீர்மானம்: சட்டப்பேரவை விதிமீறல் நடந்ததாக குற்றச்சாட்டு அதிமுக வெளிநடப்பு”