தேனி-கம்பம்: சர்வதேச போதை ஒழிப்பு தினத்தையொட்டி கம்பம் நகரில் தனியார் அறக்கட்டளை நிர்வாகத்தின் சார்பில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியை நடத்தினார்கள்.

சர்வதேச போதை ஒழிப்பு தினத்தையொட்டி தமிழ்நாடு முழுவதும் இன்று பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.

அதன் தொடர்ச்சியாக தேனி மாவட்டம் கம்பம் நகரில் உள்ள ரேஷ்மா மெடிக்கல் மிஷன் சார்பில் காந்தி சிலை முன்பு தொடங்கிய இந்த போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு குறித்த பேரணியில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கைகளில் விளம்பரப் பதாகைகளை ஏந்தி போதை பொருள் தடுப்பு குறித்து கண்டன கோஷங்களை எழுப்பியும் துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கி நகரின் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக வந்தனர்.  

கம்பம் நகரில் உள்ள ரேஷ்மா மெடிக்கல் மிஷன் சார்பில் காந்தி சிலை முன்பு தொடங்கிய இந்த போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு குறித்த பேரணி நடைபெற்றது.

 அதனைத் தொடர்ந்து கம்பம் வடக்கு காவல் நிலையம் முன்பு

பேரணியை முடித்துவிட்டு போதைப் பொருள் விற்பனை மற்றும் பயன்பாட்டை தடுக்கும் விதமாக உறுதி மொழியினை ஏற்றுக் கொண்டனர்.

Related

“கிருஷ்ணகிரி  4 மசார் தர்காவில் 13-ம் ஆண்டு மொகரம் விழா”