தேனி மாவட்டம் - கம்பம்: தேனி மாவட்டம் கம்பம் நகரில் பல வருடங்களாக சாக்கடை கழிவுகள் படிந்து இருந்த கண்மாயை கம்பம் தொகுதி எம்எல்ஏ முயற்சிக்கு பின் பொதுப்பணி துறையினர் சீரமைக்கும் பணியில் ஈடுபட்ட சம்பவம் விவசாயிகளிடமும் பொதுமக்களிடமும் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
மிகவும் பழமை வாய்ந்த ஏலரசு கோவிலுக்கு வரும் பக்தர்களும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர்.
தேனி மாவட்டம் கம்பம் நகரில் இருந்து காமயகவுண்டன்பட்டிக்கு செல்லும் சாலையில் உள்ள மிகவும் பிரசித்தி பெற்ற ஏழரசு ஈஸ்வரன் திருக்கோவில் அருகே வீர நாயக்கர் குளம் உள்ளது. பொதுப்பணித் துறையினரின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த குளத்திற்கு முல்லைப் பெரியாற்று பாசனத்தின் மூலம் தண்ணீர் வழங்கி அப்பகுதியில் உள்ள சுமார் 500-க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலப்பரப்பில் விவசாயிகள் பாசன வசதி பெற்று வருகின்றனர்.

இந்தக் குளம் கம்பம் நகராட்சியில் அமைந்துள்ளது. நகர் பகுதியில் இருந்து வரும் சாக்கடை கழிவுகள் அனைத்தும் இந்த குளத்தில் தேங்கி குளம் மாசுபடுகிறது. பல வருடங்களாக குளத்தில் உள்ள கழிவுகளை அகற்றாமல் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுயது. விவசாய நிலங்களுக்குச் செல்லும் தண்ணீரில் மாசு கலந்த பொருட்களான பிளாஸ்டிக் மற்றும் கண்ணாடி பாட்டில்கள் மக்கள் பயன்படுத்திய இதர கழிவுகள் அனைத்தும் படிமங்களாக தேங்கி சென்றன. அந்த நீரை விவசாய பாசனத்திற்கு விவசாயிகள் பயன்படுத்தும் அவல நிலை ஏற்பட்டு வந்தது .
மேலும், மிகவும் பிரசித்தி பெற்ற ஏழரசு ஈஸ்வரன் திருக்கோவிலுக்கு வருகை தரும் பக்தர்களும் கோவிலை சுற்றி மாசடைந்த கழிவுநீர் மற்றும் துர்நாற்றம் வீசி வருவதால் தொற்று நோய்க்கு அவதிப்பட்டு வரும் அவல நிலையும் ஏற்பட்டு வந்துள்ளது. மேலும் இக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்த அசைவ உணவு சமைத்து திருக்கோவில் வளாகத்தில் அமர்ந்து உண்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்தத் துர்நாற்றத்தில் அமர்ந்து சாப்பிட முடியாமல் கோவிலுக்கு வருகை தந்த பக்தர்கள் பல நாட்களாக முகம் சுளித்து சென்றுள்ளனர்.
இதுகுறித்து இந்த குளத்திற்கு வரும் மாசு கழிவுகளை வரவிடாமல் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கம்பம் நகராட்சி நிர்வாகத்தினரிடம் முன்னாள் கம்பம் திமுக எம்.எல்.ஏவிடம் பல முறை முறையிட்டும் அவர்கள் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் தொடர்ந்து சாக்கடை கழிவுகள் விவசாய கால்வாய் கண்மாயிலும் கோவிலின் வளாகத்தில் உள்ள சுற்றுப்புறங்களிலும் தேங்கி தொடர்ந்து தொற்று நோய் பரவும் அபாய நிலை ஏற்பட்டு வந்தது.

இந்நிலையில் இப்பகுதியில் உள்ள விவசாயிகளும் கோவிலுக்கு வருகை தந்த பக்தர்களும் கம்பம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பி.எல்.ஏ. ஜெகநாத் மிஸ்ரா விடம் இதுகுறித்து புகார் தெரிவித்ததை தொடர்ந்து கம்பம் சட்டமன்ற உறுப்பினர் சீரிய முறையில் பொதுப்பணித்துறையினர் அனுகியதை தொடர்ந்து பொதுப்பணித்துறையினர் சாக்கடை கழிவுநீரில் தேங்கி வந்த கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
மேலும் தொடர்ந்து பல நாட்களாக இந்த கண்மையை சீரமைக்கும் பணியை மேற்கொண்டு அங்குள்ள பகுதியில் சுகாதாரமான சூழ்நிலையை ஏற்படுத்தி கோவிலுக்கு வருகை தரும் பக்தர்களுக்கும் விவசாயத்திற்குச் செல்லும் தண்ணீர் மாசடையாத வகையில் முறையாக வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர் .
கடந்த 30 வருடங்களுக்கு மேலாக நகராட்சி பகுதியில் இருந்து வந்த கழிவு நீர் விவசாய கன்மாயில் தேங்கி பொதுமக்கள் மற்றும் விவசாயிகளுக்கு பயனற்ற நிலையில் இருந்ததை இன்று பொதுப்பணித்துறையினர் பொக்லைன் இயந்திரம் மூலம் சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்ற சம்பவம் அப்பகுதி விவசாயிகளிடமும் கோவிலுக்கு வருகை தரும் மக்களிடமும் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது .

வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.