தேனி: சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு தேனியில் மாரத்தான் போட்டியை மாவட்ட ஆட்சியர் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.
சுமார் 300க்கும் மேற்பட்ட நபர்கள் இந்த மாரத்தான் போட்டியில் கலந்து கொண்டு போதைப் பொருளுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை சார்பில் சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினம் இன்று கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டில் போதைப்பொருள் இல்லாத தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு மாரத்தான் போட்டி தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.
இதன் ஒரு பகுதியாக தேனி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற மாரத்தான் போட்டியை தேனி மாவட்ட ஆட்சியர் வைத்திநாதன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

மாவட்ட விளையாட்டு மைதானத்தில் தொடங்கிய இந்த மாரத்தான் போட்டி புதிய பேருந்து நிலையம், கலெக்டர் அலுவலகம், பின்னர் மீண்டும் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் வந்து முடிவடைந்தது.
14 வயதுக்கு மேற்பட்ட சுமார் 300க்கும் மேற்பட்ட நபர்கள் இந்த மாரத்தான் போட்டியில் கலந்து கொண்டு பின்னர் போதை பொருளுக்கு எதிராக உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் மாவட்ட விளையாட்டு அலுவலகம் சார்பில் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.