தேனி: நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த தொடர் மழையால் கும்பக்கரை அருவியில் துவங்கிய நீர்வரத்து கடந்த 29 நாட்களுக்குப் பிறகு கும்பக்கரை அருவியில் குளிக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

தேனி மாவட்டம் பெரியகுளம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது கும்பக்கரை அருவி.  நீர் பிடிப்புப் பகுதிகளான வட்டக்கானல் மற்றும் பாம்பார்புரம் உள்ளிட்ட மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த சில மாதங்களாக மழை இல்லாததால் அருவி வறண்டு காணப்பட்டது. இதனால் கடந்த மாதம் முதல் சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது.

கடந்த சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் மேற்படிப்பு பகுதியில் பெய்து வரும் பரவலான மழையால், கும்பக்கரை அருவிக்கு நீர்வரத்து மீண்டும் தொடங்கியுள்ளது. கும்பக்கரை அருவிக்கு நீர் வரத்து துவங்கியதை  தொடர்ந்து, தேவதானப்பட்டி வனத்துறையினர் கடந்த 29 நாட்களுக்கு பின்பாக இன்று முதல் சுற்றுலாப் பயணிகள் குளிக்கவும், அருவியைப் பார்வையிடவும் விதித்திருந்த தடையை நீக்கியுள்ளனர்.
நீண்ட நாட்களுக்குப் பிறகு கும்பக்கரை அருவியில் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Related

“திருப்பரங்குன்றம் தீபத் தூணில் தீபம் ஏற்றக்கோரி இந்து மக்கள் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்! ”