தேனி: கம்பம் அருகே கூடலூரில் அமைந்துள்ள மிகவும் பிரசித்தி பெற்ற
அருள்மிகு நாகவள்ளி ஸ்ரீ போலஜ்ஜியம்மன் திருக்கோவிலில் குடமுழுக்கு விழா மிக விமர்சையாக நடைபெற்றது.
தேனி மாவட்டம், கம்பம் அருகே உள்ள கூடலூரில் அமைந்துள்ளது அருள்மிகு நாகவள்ளி ஸ்ரீ போலஜ்ஜியம்மன் திருக்கோயில். மிகவும் பழமையான இக்கோவில் குடமுழுக்கு விழா இன்று மிக விமர்சையாக நடைபெற்றது.

இதற்காக நான்கு கால யாக பூஜைகள் கோ மாத பூஜை நடத்தப்பட்ட கடம் புறப்பாட்டுடன் வேத மந்திரங்கள் முழங்க கோபுர கலசங்களுக்கும் கோவில் வளாகத்தில் உள்ள
உப சன்னிதான பரிவார தெய்வங்களுக்கும் புனித நீர் ஊற்றி பட்டாச்சார்யர்களால் குடமுழுக்கு விழா நடத்தப்பட்டது.
அதன் பின்னர் நாகவள்ளி சுவாமிக்கும் போலஜ்ஜியம்மனுக்கும் அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்கள்.

அதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு புனித நீர் தெளித்து சிறப்பு வழிபாடுகளை நடத்தினார்கள். இந்த விழாவில் கூடலூர் நகர்ப்பகுதி மற்றும் கம்பம் சின்னமனூர் உத்தமபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
விழாவில் கலந்து கொண்டவர்களுக்கு அன்னதானத்தினை பிரசாதமாக வழங்கினார்கள்.
இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை திருப்பணி குழுவினர் பெய்து இருந்தனர்.

வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.