தேனி : திருப்பரங்குன்றம் மலையில் உள்ள  தீபத் தூணில் தீபம் ஏற்றக்கோரி இந்து மக்கள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!

அமைச்சர்கள் நிர்மல் குமார், வன்னியரசு மற்றும் கவிஞர் வைரமுத்துவை கண்டித்து கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் முருகன் கோயில் மலை மீது உள்ள தீபத் தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் இந்து மக்கள் கட்சி சார்பில் உரிமை மீட்பு போராட்டம் நடைபெற்றது.

இதன் ஒரு பகுதியாக தேனியில் இந்து மக்கள் கட்சி தொண்டரணி மாநில துணைத் தலைவர் குரு ஐயப்பன் தலைமையில் தீபத் தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தேனியில் இந்து மக்கள் கட்சி தொண்டரணி மாநில துணைத் தலைவர் குரு ஐயப்பன் தலைமையில் தீபத் தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தீபத் தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவுப்படி நீதிபதி சுவாமிநாதன் வழங்கிய தீர்ப்பை செயல்படுத்தக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

மேலும் தீபத் தூணில் தீபம் ஏற்றுவதில் இருக்கும் நடைமுறையே தொடரும் என கூறிய அமைச்சர் நிர்மல் குமாரை கண்டித்தும் இந்து மதத்திற்கு எதிராக பேசி வரும் அமைச்சர் வன்னியரசு மற்றும் கருத்து வைரமுத்துவை கண்டித்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்து மக்கள் கட்சி தொண்டரணி மாநில துணை தலைவர் குரு ஐயப்பன், ஆன்மீக அணி மாநில செயலாளர் வேல்முருகன்  தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மண்டல தலைவர் திரு கருப்பையா, மாவட்ட பொதுச்செயலாளர் மணியம்பட்டி கார்த்திக்,  இந்து மக்கள் கட்சி தொண்டர் அணி மாவட்ட தலைவர் ரவிச்சந்திரன், மாவட்ட துணைச் செயலாளர் கலைச்செல்வன், தேனி ஒன்றிய செயலாளர் ரங்கநாதன் , ஆன்மீக அணி மாவட்ட தலைவர் செல்வந்திரன்,  ஆன்மீக அணி கடமலை மயிலை வடக்கு ஒன்றிய செயலாளர் ராஜா, தெற்கு ஒன்றிய செயலாளர் மாயவிதாகரன் உள்ளிட்ட  நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related

“29 நாட்களுக்குப் பிறகு கும்பக்கரை அருவியில் குளிக்க அனுமதி”