சென்னை: முதலமைச்சர் ஜோசப் விஜய் பிறந்தநாள் முன்னிட்டு தவெக கட்சியினர்  திருத்தணி ‌  முருகன் கோவிலில் தங்கத்தேர் இழுத்து வழிபாடு நடத்தினர்.

தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் பிறந்த நாளை முன்னிட்டு முருகப்பெருமாளின் ஐந்தாம் படை வீடான திருத்தணி முருகன் கோவிலில் தவெக கட்சியின் மாவட்ட இளைஞரணி ஒருங்கிணைப்பாளர் ராக்கி ஏற்பாட்டில் திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளர் டில்லிபாபு   தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட தவெக  கட்சியினர் முருகப்பெருமானுக்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர். அதனைத் தொடர்ந்து முதலமைச்சர் ஜோசப் விஜய் நலமுடன் வாழ சிறப்பு பூஜைகள் செய்து   முருகப்பெருமான் சிறப்பு அலங்காரத்தில் மாட வீதியைச் சுற்றி   தங்க தேர் பவனி  இழுத்து வழிபட்டனர் அப்போது அரோகரா அரோகரா என பக்தி முழுக்கத்துடன் தவெக  கட்சியினர் வழிபட்டனர் அதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.

Related

“கம்பம்- கூடலூர் நாகவள்ளி ஸ்ரீ போலஜ்ஜியம்மன் திருக்கோவில் குடமுழுக்கு விழா!”