சென்னை: சிங்கப்பெண் அதிரடிப்படையில் பணியாற்றும் பெண் போலீசாருக்கு லத்தி உட்பட எந்த ஆயுதமும் கிடையாது என சிங்கப்பெண் அதிரடிப்படை ஐஜி பவானிஸ்வரி தெரிவித்தார். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றம் இழைப்பவர்களை காவல் நிலையங்களில் ஒப்படைக்க மட்டுமே சிங்கப்பெண் அதிரடிப்படை போலீசார் ஈடுபடுவார்கள். தமிழகத்தில் உள்ள ஒரு காவல் மாவட்டத்திற்கு ஒரு சிங்கப் பெண் அதிரடிப்படை குழு மட்டுமே செயல்படும் எனவும் அவர் தெரிவித்தார். 

தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுப்பதற்காக தமிழக முதல்வர் ஜோசப் விஜய் சிங்கப்பெண் அதிரடி படை என்ற புதிய அமைப்பை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் தொடக்கி வைத்தார். சிங்கப்பெண் அதிரடிப்படை ஐஜியாக பவானிஸ்வரி நியமிக்கப்பட்டுள்ளார். டிஜிபி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஐஜி பவானிஸ்வரி பேட்டி: 

முதலமைச்சர் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையை துவங்கி வைத்துள்ளார். இத்திட்டத்தின் முதல் நோக்கம் பெண்கள் குழந்தைகளுக்கு பாதுகாப்பு அளிப்பது தான் என்றும், பெண்கள் பணி புரியும் இடங்களுக்கு சிங்கப்பெண் அதிரடி படையை சேர்ந்தவர்கள் சென்று பெண்களுக்கு நம்பிக்கையூட்டும் வகையில் செயல்படுவார்கள் என கூறினார். குற்ற சம்பவங்கள் நடைபெறும் இடங்களை கண்டறிந்து, அந்த இடத்தை பெண்களுக்கு பாதுகாப்பான இடமாக மாற்ற நடவடிக்கை எடுப்பார்கள் என தெரிவித்துள்ளார். சிங்கப்பெண் அதிரடி படையினர் மக்களுக்கு விழிப்புணர்வு அளிக்க வேண்டிய நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள்.

 இத்திட்டத்திற்காக 357 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதுஎன்றும் , சிங்கப்பெண் படையினர் குற்றம் முழுமையாக நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுப்பதுடன் குற்றம் நடைபெறும் பட்சத்தில் அதற்குரிய  தண்டனையை பெற்று தருவார்கள் என ஐஜி பவானீஸ்வரி தெரிவித்துள்ளார்.குறிப்பாக பெண்களுக்கு பாதுகாப்பான இடமாக தமிழகத்தை மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும், என்றும் முதல் கட்டமாக தமிழகத்தில் 70 குழுக்கள் இன்றுமுதல் செயல்பட தொடங்கியுள்ளதாக கூறினார். ஆன்லைன் மூலம்  பெண்கள் அதிகளவில் பாதிப்புக்கு உள்ளாகின்றனர், இத்திட்டம் மூலம் வரும் முன் காப்பது தான் முதல் நோக்கமாகும்‌.

ஒவ்வொரு மாவட்டங்களிலும் ஏற்கனவே  குற்றம் சம்பவங்கள் நடைபெற்ற இடங்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து மாவட்டங்களிலும் ட்ரோன் மூலம் கண்காணிக்கப்படும் என்றும் இதற்காக முதல் கட்டமாக 49 ட்ரோன்கள் வாங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார் . தமிழகத்தில் பிங்க் பேட்ரோல் மற்றும் சிங்கப்பெண் அதிரடிபடை செயல்படும் என்றும் பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பை உறுதி செய்வது தான் இதன் நோக்கம் என கூறினார். பெண்களுக்கு முழுமையான பாதுகாப்பை அளிக்க வேண்டும் என்பதற்கு தான் இந்த திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

அதி நவீன தொழில்நுட்பம் மூலம், live streaming என்கிற வகையில், சிங்கப்பெண் படையினரின் நடவடிக்கையை கண்காணிக்க முடியும் என ஐஜி பவானீஸ்வரி தெரிவித்துள்ளார்.

Related

“மேகதாது தனித்தீர்மானம்: சட்டப்பேரவை விதிமீறல் நடந்ததாக குற்றச்சாட்டு அதிமுக வெளிநடப்பு”