கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் பின்புறம் அமைந்துள்ள 4 மசார் தர்காவில் 13-ம் ஆண்டு மொகரம் விழாவினையொட்டி தீமிதிக்கும் விழா நடைபெற்றது. சாதிமத பாகுபாடு இன்றி ஏராளமானவர்கள் கலந்துகொண்டு வழிப்பட்டனர்.
கிருஷ்ணகிரி, ஜாகீர்வெங்கடாபுரம், ஊராட்சி புதிய பேருந்து நிலையம் பின்புறம் அமைந்துள்ள 4 மசார் தர்காவில் 13-ம் ஆண்டு மொகரம் பண்டிகை கொண்டாடப்பட்டது. இந்த விழாவினைதமிழக தர்காபேரவையின் கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளர் சலீம் தலைமையில் ஹஸ்ரத் மாலிக் முன்னிலையில் சிறப்பு துவா, பாத்தியாவும் நடைபெற்றது.

இந்த மொகரம் திருவிழாவில் கிருஷ்ணகிரி மட்டுமின்றி அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து ஜாதி மத வேறுபாடு இன்றி ஏராளமானவர்கள் கலந்து கொண்டு நாட்டில் உள்ள அனைத்து சமுதாய மக்களும் நலமுடன் வாழவேண்டி பிராத்தனை மேற்கொண்டு வழிப்பட்டனர். வேண்டுதல் நிறைவேற்றும் வகையில் உசேன், உசேன் என்கிற கோசங்களுடன் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை தீயில் இறங்கினார்கள். தர்காவிற்கு வந்த அனைத்து பொது மக்களுக்கு சுமார் 2000 பேருக்கு மூன்று நாட்களும் அன்னதானமும் வழங்கப்படும்.
மேலும் இந்த விழாவின் போது ரியாஸ், நவீத் மற்றும் அப்துல்லா, பழைய பேட்டை ஏ.ரியாஸ், ஹபீப், தேசிய முஸ்லிம் லீக் ஃபாரூக் ,ஷாநவாஸ் இஸ்மாயில், ரிஸ்வான், இதயாத், மாலிக், ஜப்பார், கலித், சர்தார், சபீர், அனீஸ், இம்ரான், சுஹேல், ஆரீப், ஆசிப் மற்றும் அனைத்து சமுதாய மக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.