கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் நடைப்பெற்ற மருத்துவ முகாமை தவெக மத்திய மாவட்ட செயலாளர் சுரேஷ் குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்.
கிருஷ்ணகிரி பழையப்பேட்டையில், தவெக கட்சிசார்பில் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அவர்களின் பிறந்தநாளினை முன்னிட்டு மாபெரும் மருத்துவ முகாம் நடைபெற்றது. கிருஷ்ணகிரி தவெக நிர்வாகி ஏஜாஸ் தலைமையில் கோட்டை உருதுப்பள்ளியில் நடைப்பெற்ற மருத்துவ முகாமிற்கு சிறப்பு அழைப்பாளராக கலந்துக் கொண்ட மத்திய மாவட்ட தவெக செயலாளர் சுரேஷ் குத்து விளக்கு ஏற்றி மருத்துவ முகாமினை துவக்கி வைத்தார்.
தமிழக முதல்வர் பிறந்த நாளினை முன்னிட்டு நடத்தப்பட்ட இந்த மருத்துவ முகாமில் மேற்கு மாவட்ட இணைச் செயலாளர் ஹரிஸ்,மாவட்ட பொருளாளர் முருகேசன், வேப்பனம்பள்ளி மேற்கு ஒன்றிய செயலாளர் நாகராஜன், மாவட்ட மகளீர் அணி தலைவி இந்திரா,மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஹேமபிரியா, மாவட்ட மாவட்ட மாணவர் மாணவரணி அமைப்பாளர் அருள் குமார்,

மருத்துவர் அணி அமைப்பாளர் பார்த்திபன், நகர கழகம் ஹரிபிரசாந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் இந்த முகாமில் கிருஷ்ணகிரி, பழையப்பேட்டை, காந்திநகர்,சோமார்பேட்டை என பல்வேறு இடங்களில் இருந்து கலந்துக் கொண்டவர்களுக்கு மருத்துவர்கள் மூலமாக மருத்தவ சிகிச்சை முறைகள் மற்றும் மருத்துவம் குறித்த ஆலோசனைகளும் வழங்கப்பட்டது.
மேலும் இந்த மருத்துவ முகாமில் மாவட்ட மாணவரணி அமைப்பாளர் அருள், வேப்பனப்பள்ளி ஒன்றிய செயலாளர் நாகராஜ், வேப்பனப்பள்ளி தெற்கு ஒன்றிய செயலாளர் அம்பரீஷ், மாவட்ட மகளிர் அணி தலைவி இந்திரா, செயற்குழு உறுப்பினர் திருமதி ஹேமப்பிரியா இவருடன் கழக நிர்வாகிகளான தென்னரசு வேலன், கோல்டன் சுரேஷ், சரவணன், ரேணுகுமார் , ஹேமந்த் குமார், ஜெய் ஆனந்த், டாக்டர் ஐயப்பன் மற்றும் தவெக கட்சியை சேர்ந்த ஷாஹி மசூதியின் துணைத் தலைவர் பாரூக்அகமத் அஸ்ஸலாம் பாஷா, சதாம் , முபாரக், ஜாகிர் உசேன், கதிர் அஹமத், ஷால் மீன், ஆசிப், அப்பு, முபாரக் உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்,

வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.