கிருஷ்ணகிரி: தமிழக முதல்வர் பிறந்த நாளினை முன்னிட்டு கிருஷ்ணகிரியில் மத்திய மாட்ட தவெக சார்பில் மாபெரும் மாரத்தான் போட்டி நடைப்பெற்றது. இதனை மாவட்ட செயலாளர் சுரேஷ் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

கிருஷ்ணகிரி மத்திய மாவட்ட தவெக கட்சி சார்பில் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அவர்களின் பிறந்தநாளினை முன்னிட்டு மாபெரும் மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது. கிருஷ்ணகிரி டான்சி வளாகத்தில் இருந்து ஆண்கள் மற்றும் பெண்களுக்கு என தனித்தனியாக துவங்கிய மராத்தான் போட்டியை மத்திய மாவட்ட தவெக செயலாளர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இதனைத் தொடர்ந்து மராத்தான் போட்டியானது லண்டன் பேட்டை, புதிய பேருந்து நிலையம், நேதாஜி ரோடு , பழையப்பேட்டை காந்தி சிலை, தர்மராஜா கோவில், BSNL அலுவலம், ஆர்.சி.பள்ளி, பெங்களூர் சாலை வழியாக சென்று மீண்டும்  டான்சி வளாகத்தில் நிறைவடைந்தது, இதனை அடுத்து மூன்று பிரிவுகளாக நடதப்பட்ட இந்த

மாரத்தான் போட்டியில் வெற்றிப் பெற்றவர்களுக்கு மத்திய மாவட்ட தவெக செயலாளர் சுரேஷ் ரொக்கப் பரிசுகள் மற்றும் மாரத்தான் போட்டியில் கலந்துக் கொண்ட அனைவருக்கும் சான்றிதழ்களையும் வழங்கி பாராட்டினர்.

தமிழக முதல்வர் பிறந்த நாளினை முன்னிட்டு நடத்தப்பட்ட இந்த மாரத்தான் போட்டியில் கிருஷ்ணகிரி , தர்மபுரி, நாமக்கல், கோபிசெட்டிபாளையம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

மேலும் இந்த மாரத்தான் போட்டியில் மேற்கு மாவட்ட தவெக செயலாளர் வடிவேல், முன்னாள் சேர்மன் மது ஹேம்நாத்,மேற்கு மாவட்ட இணைச் செயலாளர் ஹரிஸ்,மாவட்ட பொருளாளர் முருகேசன், வேப்பனம்பள்ளி மேற்கு ஒன்றிய செயலாளர் நாகராஜன், மாவட்ட மகளீர் அணி தலைவி திருமதி இந்திரா, மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஹேமபிரியா, மாவட்ட மாவட்ட மாணவர் மாணவரணி அமைப்பாளர் அருள்குமார், மருத்துவர் அணி அமைப்பாளர் பார்த்திபன்,  நகர கழகம் ஹரிபிரசாந்த், மற்றும் தவெக நிர்வாகிகளான கோல்டன் சுரேஷ்,  தென்னரசு,வேலன், ஆனந்த், டாக்டர் ஐயப்பன் உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

Related

“29 நாட்களுக்குப் பிறகு கும்பக்கரை அருவியில் குளிக்க அனுமதி”