திண்டுக்கல்: விவசாயத்தை அழித்து, தொற்று நோயை ஏற்படுத்தி, நிலத்தடி நீரை மாசுபடுத்தும் மோர் மிளகாய் தொழிலை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் சுமார் பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களை புதிய அரசு காப்பாற்ற வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை
திண்டுக்கல் மாவட்டம், முன்னாள் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ பெரியசாமியின் சொந்த தொகுதியான ஆத்தூர் தொகுதிக்கு உட்பட்ட ஸ்ரீராமபுரம் பேரூராட்சி போலியமனூர். இப்பகுதியில் கடந்த பல வருடங்களாக மோர் மிளகாய் குறிப்பிட்ட நபர்கள் தயார் செய்து விற்பனை செய்து வந்தனர். இந்நிலையில் கடந்த சில வருடங்களாக 80 க்கும் மேற்பட்ட மிகப்பெரிய அளவில் தொழிற்சாலைகளாக மாற்றி எந்த ஒரு அடிப்படை வசதிகளும் இல்லாமல் தினந்தோறும் சுமார் 40 டன் உப்புகள் மற்றும் மோர் ,மிளகாய் உள்ளிட்டவைகளை தொட்டிகளில் ஊறவைத்து அதை தரையில் பிளாஸ்டிக் தார்பாய் விரித்து காய வைத்து தமிழகம் மட்டுமல்லாமல் பல்வேறு மாநிலங்களுக்கு இங்கிருந்து அனுப்புகின்றனர்.
மிளகாய்களை உப்பு தண்ணீரில் சிறிதளவு மோர் கலந்து ஊற வைத்து அதை காய வைக்கும் போது தொட்டியில் இருக்கும் தண்ணீரை வாய்க்கால்களில் திறந்து விடுகின்றனர். தண்ணீரை திறந்து விடுவதால் சுமார் 15 கிலோ மீட்டர் சுற்றுப்புற பகுதிகளான ஸ்ரீராமபுரம் பேரூராட்சி. காமாட்சிபுரம் ஊராட்சி, புதுப்பட்டி ஊராட்சி ,உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் நிலத்தடி நீர் முற்றிலுமாக அழிந்து. தற்போது தண்ணீர் முழுவதும் மிகவும் உப்பாகவும் அதே போல் விவசாயம் செய்ய முடியாத சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலையில் மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து நீதிமன்றம் மோர் மிளகாய் நிறுவனம் வைப்பவர்கள் பசுமை தீர்ப்பாய அலுவலக அதிகாரிகள் முன்னிலையில் சிமெண்ட் தளம் அமைக்க வேண்டும். தளத்தின் மீது தரமான பாலித்தின் கவர் விரித்து அதன் மீது மோருடன் மிளகாய் காய வைக்க வேண்டும். ஊற வைக்கும் தொட்டியில் உள்ள தண்ணீரை சோலார் பேனல் உதவியுடன் சூடு செய்து ஆவியாக வெளியேற்ற வேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் மோர் மிளகாய் ஊற வைத்த தண்ணீரை வெளியேற்றக் கூடாது உள்ளிட்ட என ஐந்து நிபந்தனைகள் பின்பற்ற வேண்டும் எனக் கூறியிருந்தது.
ஆனால் எந்தவிதமான பாதுகாப்பு உபகரணங்களோ அல்லது சுத்தமான முறையில் பதப்படுத்தும் முறைகளோ இங்கு இல்லை . மிளகாய் உப்பு மோர் சில கெமிக்கல்கள் அனைத்தையும் வெறும் கைகளாலும் ,கால்களாலும் மிதித்து கொண்டு இதில் பணியாற்றும் ஊழியர்கள் செய்து வருகின்றனர். தற்போது சுற்றுப்புற பொதுமக்கள் அனைவருக்கும் பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய், ஆண்களுக்கு சிறுநீரகப் பிரச்சனை என தொடர்ந்து வருகிறது. மேலும் மோர் மிளகாய் ஊறவைக்கும் போது காலால் தான் மிதித்து ஊற வைப்பதால் யானைக்கால் நோய் வருகிறது. மேலும் தொடர்ந்து தண்ணீரை கழிவு நீர் வாய்க்காலில் வெளியேற்றுவதால் விவசாயம் முற்றிலுமாக சுற்றுப்புறப் பகுதிகளை அழிந்து வருகிறது நிலத்தடி நீரும் மாசுபட்டு தற்போது அனைவருக்கும் தொற்று நோய் ஏற்படுகிறது.

தற்போது பொறுப்பேற்றுள்ள அரசு நேரடியாக ஆய்வு செய்து சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு கொடுத்துள்ள விதிமுறைகளை பின்பற்றாத நிறுவனங்களை மூட வேண்டும். யாருக்கும் பாதிப்பு இல்லாத பகுதிக்கு கொண்டு செல்ல வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.

வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.