சென்னை: சென்னை அமைந்த கரையில் உள்ள தனியார் மண்டபத்தில் தமிழக பாஜக ஊடகப்பிரிவு தலைவர் ரங்கலு குடும்ப விழாவில் தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கலந்து கொண்டார் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தவர்,
எனக்கு ரொம்ப வேண்டிப்பட்டவர் செங்கோட்டையன் 1991 ஆம் ஆண்டிலிருந்து அமைச்சராக இருந்தவர் 96 இல் இருந்து பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு சூழ்நிலையில் அவருடன் தங்கி இருந்தேன்.
அதன் பின்பு மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுடன் நானும் செங்கோட்டையனும் தான் பயணங்களுக்கு ரூட் போட்டு பல இடங்களுக்கு சென்றிருக்கிறோம்.
அதனால் என்னை பற்றி நன்றாகவே செங்கோட்டையன் அவர்களுக்கு தெரியும் செங்கோட்டையன் பற்றி நன்றாகவே மிக நன்றாகவே எனக்கு தெரியும். அதனால் அவர் அடக்கி வாசித்தால் மிகவும் நல்லது என விமர்சனம் செய்த அவர், ஜெயலலிதா காலத்திலிருந்து சம்பந்தம் சம்பந்தம் இல்லாமல் ஆஜராகி பல இடத்தில் மாட்டிக் கொண்டவர்தான் செங்கோட்டையன் என கூறிய நயினார்,
நான் மருத்துவ கல்லூரிக்கு விண்ணப்பம் செய்திருந்தால் வேறு ஏதாவது கல்லூரிக்கு விண்ணப்பித்து இருந்தாலும் நான் அரசியல் விட்டு விலக தயார் அண்ணன் செங்கோட்டையன் அமைச்சர் பதவியை மட்டும் விட்டு செல்ல தயாரா..? என சவால் விடுத்தார்.
அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆளுநர் அனுமதிக்காதது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர்,
தமிழக மக்களுக்கு நன்மை செய்யும் விஷயத்தில் மட்டும் எங்களது கவனம் இருக்கும், பாஜக தமிழகத்தில் நலன் எங்கு உள்ளது அதில் மட்டும் தான் அக்கறை காட்டுவோம்.
முன்பு இருந்த அமைச்சர் மின்சாரம் துண்டிக்கப்பட்ட போது அணில் தான் காரணம் என கூறினார் தற்பொழுது உள்ள அமைச்சர் குரங்கு வந்துவிட்டது மின்சாரம் துண்டிக்கப்பட்டது என கூறுகிறார்கள். மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பது மட்டுமே எங்களது எண்ணம் என தெரிவித்தார்.

தொடர்ந்து கம்யூனிஸ்ட் குறித்த கேள்விக்கு பதிலளித்த நயினார், இன்று கம்யூனிஸ்ட் யாருடன் இருக்கிறார்கள் என தெரியவில்லை, கம்யூனிஸ்ட் கட்சி இது போன்ற பேசுவது அவர்கள் விளம்பரத்தை தேடுகிறார்கள் என்று எண்ணத் தோன்றுகிறது என விமர்சனம் செய்த அவர்,
ஒரு காலத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள் நேர்மையாக இருந்தார்கள் இப்பொழுது சந்தர்ப்பவாதியாக மாறிவிட்டார்கள் கூட்டணி தர்மம் என்பது அவரவர் விருப்பம் இத்தனை ஆண்டுகாலம் கூட்டணியில் இருந்து அனைத்திலும் அனுபவித்துவிட்டு இப்பொழுது இதுபோன்று பேசுவது இது சந்தர்ப்பவாத அரசியலாக பார்க்கப்படுகிறது என கூறினார்.
தொடர்ந்து உயர்கல்வித்துறை அமைச்சர் நடவடிக்கை அண்மையில் விமர்சனமான நிலையில் அதற்கு பதிலளித்த நயினார்,
உயர் கல்வித் துறை அமைச்சர் பொறுத்த வரை நான் அந்த வீடியோவை பார்த்தேன். அந்தக் காட்சி அதை பார்க்கும் பொழுதும் அது உண்மையா பொய்யா என்பதும் தெரியவில்லை ஆனால் அது வைரலாகி கொண்டு இருக்கும் காட்சியை பார்க்கும் பொழுது இதனை அவர் தவித்திருக்க வேண்டும் குறிப்பாக அவர் இதுபோன்று செய்வதை தவிர்த்து இருக்க வேண்டும் என கூறினார்.
மேலும் சட்டப்பேரவையில் முதலமைச்சரின் செய்கை குறித்த கேள்விக்கு பதில் அளித்த நயினார் நாகேந்திரன்,
அப்பாவை காணோம் அப்பாவை காணோம் என்று முதலமைச்சர் தேடினார். பொதுவாக ஒரு குழந்தைக்கு அப்பா யாருன்னு அந்த அம்மா கூறினால் தான் தெரியும். சட்டமன்றத்தில் சினிமா போன்ற வசனம் பேசியது ஒரு அநாகரிகமான செயல் இது போன்ற செய்கை செய்வது தவறு.
இவர்களுக்கு மக்கள் நலனில் அக்கறை இல்லை. இதுபோன்று அவர்கள் நடந்து கொள்வது அவர்களது தகுதி இழப்பைக் காட்டுகிறது இதுபோன்ற சட்டமன்றத்தில் செய்கை செய்வது கண்டனத்துக்குரியது என கூறினார்.
தொடர்ந்து பிரதமர் அமித்ஷா வருகை குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், இதுவரை தமிழகம் வருவது குறித்த திட்டம் எதுவும் இல்லை பின்பு தொடர்பாக அறிவிக்கப்படும் என்றார்.

வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.