சென்னை: சென்னை தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் உலக இசை தினம் மங்கள இசையுடன் துவங்கியது. இசை கல்லூரி மாணவியர்கள் தமிழ்த்தாய் வாழ்த்து பாடினர். இசை கல்லூரியின் பொறுப்பாளர் ஆ.சரவணன் மற்றும் முன்னாள் முதல்வர் ஏ.வி.எஸ். சிவக்குமார், முன்னாள் துணை இயக்குநர் வ. ஜெயபால் தலைமையில் குத்து விளக்கேற்றி விழா துவங்கப்பட்டது.

பரத் சுந்தர் குழுவினரின் இசை நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. அடுத்ததாக பண்முகத்தாள கருவி மற்றும் இசை நாடக மாணவியரின் கருவி இசை நிகழ்த்தப்பட்டது. பேராசிரியர் ஆ. சரவணன் வரவேற்புரை மற்றும் சிறப்புரை ஆற்றினார். பாட்டு போட்டி மற்றும் கருவி இசையில் வெற்றி பெற்ற மாணாக்கர்களுக்கு முன்னாள் இணை இயக்குனர் வ. ஜெயபால் பரிசுகளை வழங்கினார். நன்றி உரையினை முனைவர் சு. சாயி சரஸ்வதி இசை ஆசிரியர் பயிற்சி பேராசிரியர் தெரிவித்தார். கல்லூரி மாணவியரின் நாட்டுப் பண் உடன் விழா இனிதே நிறைவு பெற்றது .

Related

“தண்ணீர் பாட்டில் வைக்கலாமே? சட்டப்பேரவையில் சுவராஸ்யம்!”