சென்னை: திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்திற்கு வந்த தமிழக உணவு மற்றும் உணவுப் பொருள்கள் வழங்கல் துறை அமைச்சர் வருகை புரிந்து எம்எல்ஏவுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தார்.
சென்னை திருவொற்றியூர் தொகுதிக்குட்பட்ட விம்கோ நகரில் திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் அலுவலகம் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் என்.ஆனந்த் திறந்து வைத்து செந்தில்குமாரை இருக்கையில் உட்கார வைத்து சென்றார். இந்நிலையில் திடீரென தமிழக உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் வெங்கட்ராமன் திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் அலுவலகத்திற்கு வந்து எம் எல் ஏ செந்தில்குமாருக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்துக்களை தெரிவித்து அவரது இருக்கையில் உட்கார வைத்து வாழ்த்துக்களை தெரிவித்தார்.
செந்தில்குமார் அமைச்சர் வெங்கட்ராமன் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினார். இனிமே நம்ம தான் என்று அமைச்சர் தெரிவித்தார். இந்நிகழ்வில் மாவட்ட இணை செயலாளர் ஏ. ஆனந்த், மாவட்ட பொறுப்பாளர் சீனிவாசன், மாவட்டத் துணைச் செயலாளர் மாரி ஆகியோர் இந்நிகழ்வில் உடன் இருந்தனர். இதனை தொடர்ந்து அமைச்சரை திருவொற்றியூர் உள்ள தமிழக வெற்றி கழக கட்சி நிர்வாகிகள் அனைவரும் அறிமுகம் செய்து வைத்து அமைச்சருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.