சென்னை:

சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் பேசிய தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா, முதல்வர் விஜய் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்தார். அதன்பின்னர் பேசும்போது சட்டப்பேரவையில் டம்ளரில் தண்ணீர் வைப்பதற்கு பதிலாக, தண்ணீர் பாட்டில் வைக்கலாமே? என்றார்.கண்ணாடி பாட்டிலி வைத்தால் வசதியாக இருக்கும். பிளாஸ்டிக் பாட்டிலில் வேண்டாம்.

அப்போது குறிக்கிட்ட முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், பேரவையில் பிரேமலதா குறிப்பிட்டது நல்ல கருத்து தான். ஆனால் தண்ணீர் பாட்டில் வைத்தால் கோபம் வரும் நேரத்தில் தண்ணீர் பாட்டிலைக்கொண்டு அடிப்பார்கள் என்றார். அப்போது குறுக்கிட்ட பிரேமலதா, அப்போது டம்ளரைக்கூட வீசுவார்களே என்றார். அதனைத் தொடர்ந்து பேசிய முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு, ஓபிஎஸ் அவருடைய தனிப்பட்ட அனுபத்தின் காரணமாக அப்படி பேசுகிறாரோ என்பதை அறிய விரும்புகிறேன் என்றார். சிறிதுநேரம் சட்டப் பேரவையில் சிரிப்பலை எழுந்தது.


வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.