சென்னை: தேசிய அளவில் ஆகஸ்டு 9 தேதி டெல்லியில் மிகப்பெரிய மாணவர் போராட்டம் நடைபெறும் என கேரள உயர்கல்வித்துறை அமைச்சர் ரோஜி ஜான் தெரிவித்தார். 

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் நீட் தேர்வு முறைகேடுகளை கண்டித்தும், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் தொடங்கப்பட்டுள்ள "மாணவர்களின் குரல்" இயக்கம் செயல்பாடுகள் குறித்து கேரளா மாநில உயர்கல்வித்துறை அமைச்சர் ரோஜி எம் ஜான் மற்றும் அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் தேசிய பொதுச் செயலாளர் லெனின் பிரசாத் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர்.

இந்த செய்தியாளர் சந்திப்பின்போது பேசிய கேரள மாநில உயர்கல்வித்துறை அமைச்சர் ரோஜி ஜான் பேசுகையில், இந்த ஆண்டு மே மாதம் 12 ஆம் தேதி நடைபெற இருந்த நீட் தேர்வு கேள்வித்தாள் கசிந்த காரணத்தினால் ரத்து செய்யப்பட்டது. இந்த 2024 25 ஆண்டுகளிலும் கேள்வி தாள்கள் வெளியாகி உள்ளது. 2014 ஆம் ஆண்டு இதேபோல் நீட் தேர்வு கேள்வித்தாள்கள் வெளியான போது சம்பந்தப்பட்ட நபர்கள் கைது செய்யப்பட்டனர் ஆனால் அதன் பின்பு அதன் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது குறித்து எந்த விவரமும் கிடையாது.

கடந்த 5-6 ஆண்டுகளில் இதுவரை 100-ற்கும் மேற்பட்ட மாணவர்கள் நீட் தேர்வினால் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதுவரை தற்போது 14 மாணவர்கள் இந்த நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டதனால் இந்த ஆண்டு தற்கொலை செய்து கொண்டனர் தமிழ்நாட்டில் இருந்து மூன்று பேர் தற்கொலை செய்து கொண்டனர்.  பல லட்சம் மாணவர்கள் நீட் தேர்வினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் நடைபெற்ற 94 வகையான தேர்வுகளில் ஏராளமான முறைகேடுகள் நடைபெற்றுள்ளது. வருடத்திற்கு 6 கோடி மாணவர்கள் இந்த முறைகேடான தேர்வுகளினால் பாதிக்கப்படுகின்றனர்

5 லட்சம் முதல் 6 லட்சம் வரை செலவு செய்து மாணவர்கள் இந்த தேர்வுகளுக்கு தயாராகின்றனர். சுமார் மூன்று லட்சம் கோடி ரூபாய் இதனால் பொதுமக்களினுடைய பணம் வீணாக்கப்பட்டுள்ளது. டிஜிட்டல் இந்தியா என்று சொல்லிக் கொண்டிருக்கும் இந்தியாவில் ஒரு தேர்வை கூட முறையாக நடத்த முடியவில்லை.

நீட் தேர்வினால் மாணவர்களிடையே தீவிர மனநலன் சார்ந்த பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளது. இதற்கு மத்திய அரசு பொறுப்பேற்று கொண்டு, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும். மத்திய அரசிடம் மூன்று கோரிக்கைகள் வைக்கப்படுகிறது. மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும். தேர்வு முறைகளை மாற்றி அமைக்க வேண்டும்

மத்திய அரசின் சார்பில் அனைத்து தேர்வுகளுக்கும் வருடாந்திர அட்டவணைகள் வெளியிடப்பட வேண்டும். தேசிய தேர்வு முகமையை கண்டித்து 40 நாட்கள் தொடர்ந்து பல்வேறு கட்ட போராட்டங்கள் நடைபெறும். அதனை தொடர்ந்து நாற்பதாவது நாள் இறுதியில் தேசிய அளவில் ஆகஸ்டு 9 ம் தேதி டெல்லியில் மிகப்பெரிய மாணவர் போராட்டம் நடைபெறும் எனத் தெரிவித்தார்.

Related

“மேகதாது அணை கட்ட முயற்சிக்கு கர்நாடக அரசைக் கண்டித்து தனித்தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்!”