திருப்பூர் : திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம்,  திருப்பூர் மாற்றுத்திறனாளிகள் நல முன்னேற்ற சங்கம் சார்பாக பல்லடம் அலுவலகத்தில் நிர்வாகி கணபதி தலைமையில் தலைவர் ஈ.பி.அ.சரவணன் முன்னிலையில் நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கேற்ற பல்லடம் மின்வாரிய ஏஇ வேலுச்சாமி நிகழ்வில் கலந்து கொண்டு 50 க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் குழந்தைகளுக்கு ஸ்கூல் பேக், பேனா, பென்சில், வாட்டர் பாட்டில் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்பித்தார்.

இந்த நிகழ்வில் சங்க நிர்வாகிகள் மூர்த்தி, திருமுருகன், பாலமுருகன், சுப்பிரமணியம், கீதா, மகேஸ்வரி, காளிமுத்து, அன்னால் ஆரோக்கிய மேரி, சண்முக வள்ளி , சத்தியராஜ், ராஜேஷ்குமார், பாஸ்கர், உள்ளிட்ட 70 க்கும் மேற்பட்டோர்கள் கலந்து கொண்டனர்.

Related

“இருசக்கர வாகனத்தில் மான் மோதிய விபத்தில் சலூன் கடை உரிமையாளர் உயிரிழப்பு!”