சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் சொக்கநாதபுரம் அருகே உள்ள கீழக்கோட்டையைச் சேர்ந்த மகேந்திரன், தனது சொந்த ஊரில் சலூன் கடை நடத்தி வந்தார். இவர் இருசக்கர வாகனத்தில் மதகுபட்டியிலிருந்து செம்பனூர் நோக்கிச் சென்று கொண்டிருந்தார்.

அப்போது மதகுபட்டி – செம்பனூர் சாலையில் உள்ள காட்டுப்பகுதியை கடந்து சென்றபோது, எதிர்பாராத விதமாக புதருக்குள் இருந்து திடீரென சாலையில் குறுக்கே வந்த மான் ஒன்று அவரது இருசக்கர வாகனத்தின் மீது மோதியதாக கூறப்படுகிறது. எதிர்பாராத இந்த சம்பவத்தில் நிலைதடுமாறி கீழே விழுந்த மகேந்திரன் பலத்த காயமடைந்தார்.

இதனைக்கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக அவரை மீட்டு சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

ஆனால் அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி மகேந்திரன் உயிரிழந்தார். இந்த சம்பவம் அவரது குடும்பத்தினரையும், சொந்த ஊர் மக்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதுகுறித்து தகவலறிந்த கல்லல் காவல்துறையினர் இந்த விபத்து குறித்து  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related

“கோவில்பட்டியில் நூதன போராட்டத்தில் ஈடுபட்ட தமாகா!”