சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், நாட்டரசன்கோட்டை கலாம் உதவும் கரங்கள் சார்பில் புத்தக வெளியீட்டு விழா மற்றும் மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது. அமைப்பின் தலைவர் அரிமா முத்துப்பாண்டியன் தலைமை வகித்தார். பேரூராட்சி தலைவர் பிரியதர்ஷினி கவிராஜ், துணைத் தலைவர் கார்த்திகா முருகானந்தம் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
கவிஞர் சரவணப்பாண்டி எழுதிய "விண்வெளி கண்ட விடிவெள்ளி டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம்" நூலை தமிழ்ச் செம்மல் பகீரத நாச்சியப்பன் வெளியிட, இந்தோ-திபெத்திய எல்லைப் பாதுகாப்புப் படை டி.ஐ.ஜி. ஜஸ்டின் ராபர்ட் பெற்றுக்கொண்டார்.
10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள் மற்றும் உயர்கல்வியைத் தொடர இயலாத ஏழை மாணவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ், நினைவுப் பரிசு மற்றும் நிதியுதவி வழங்கப்பட்டது.
விழாவில் கல்வி, தமிழ் மற்றும் சமூக அமைப்புகளைச் சேர்ந்த பல்வேறு பிரமுகர்கள் வாழ்த்துரை வழங்கினர். பட்டிமன்றப் பேச்சாளர் ராமச்சந்திரன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். செயலாளர் குணசேகரன் வரவேற்றார். பொருளாளர் முருகேசன் நன்றி கூறினார்.
நிகழ்ச்சியில் கலாம் உதவும் கரங்கள் நிர்வாகிகள், உறுப்பினர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டனர்.

வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.