கோவில்பட்டி: தமிழக முதல்வர் ச. ஜோசப் விஜய் ஆணைக்கிணங்க ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் என். ஆனந்த் ஆலோசனைப்படி தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் மற்றும் மாநில நிர்வாக குழு உறுப்பினர் எஸ். பாலசுப்பிரமணியன் அறிவுறுத்தலின்படி பள்ளி குழந்தைகளுக்கு மூக்கரை விநாயகர் கோவில் அருகில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட கழகச் செயலாளர் எஸ்.பாலசுப்பிரமணியன் தலைமையில் நோட்டு புத்தகம் மற்றும் புத்தக பை  வழங்கப்பட்டது. 

மத்திய ஒன்றிய பொறுப்பாளர் பிரசாத் முன்னிலை வகித்தார். இந்நிகழ்வை கோவில்பட்டி மத்திய  ஒன்றிய நிரவாகி கணேஷ் ஏற்பாடு செய்திருந்தார்.இதில் மாவட்ட, நகர, ஒன்றிய, வார்டு, கிளைக் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related

“கோவில்பட்டியில் சாலையோர கடைகளில் உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் திடீர் ஆய்வு!”