கோவில்பட்டி: ஆக்கிரமிப்புகளை அகற்றாத நெடுஞ்சாலை துறை அதிகாரிகளை கண்டித்து தேங்காய் பூ பழத்துடன் நூதன போராட்டத்தில் ஈடுபட்ட  தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியினர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகரில் நெடுஞ்சாலைத்துறைக்குட்பட்ட சாலை ஓரங்கள் முழுவதும் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகி பொதுமக்கள் மற்றும் வாகனங்கள் செல்ல முடியாத நிலை உள்ளது. மேலும் ஆக்கிரமிப்பு காரணமாக 60 அடி சாலைகள் 20 அடிகளாக சுருங்கி அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு உயிர் இழப்புக்கள் ஏற்படுவது மட்டுமின்றி பலரும் காயமடைந்து வருகின்றனர். பலமுறை கோரிக்கை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காமல் நெடுஞ்சாலைத் துறை நிர்வாகம் அலட்சியம் காட்டி வருவதாகவும், எனவே உடனடியாக ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரியும், அலட்சியம் காட்டி வரும் நெடுஞ்சாலை துறை நிர்வாகத்தை கண்டித்தும்  தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர் கோவில்பட்டி நெடுஞ்சாலைத்துறை  அலுவலகத்தில் தேங்காய் பூ பழத்துடன் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் மாவட்டத் தலைவர் ராஜகோபால் தலைமையில் இந்த போராட்டத்தில் திரளான கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு, தேங்காய் பூ பழத்துடன் பதவி போட்ட பொறியாளர் ரத்தின பாபுவிடம் தங்களது கோரிக்கை மனுவில் வழங்கினர்.

Related

“இருசக்கர வாகனத்தில் மான் மோதிய விபத்தில் சலூன் கடை உரிமையாளர் உயிரிழப்பு!”