சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பகுதியில், திருப்புவனம் சந்தை மார்கெட்டில் இருந்து மடப்புரம் கோவில் செல்லும் சாலையில் உள்ள வைகை ஆற்று பாலத்தின் அடிப்பகுதியில், அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் கிடந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்த திருப்புவனம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சடலத்தை மீட்டு உடற்கூறு பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், உயிரிழந்த நபர் யார், அவர் எவ்வாறு உயிரிழந்தார் என்பது குறித்து திருப்புவனம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.